'சூர்யா 43' அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 43 வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. 

இதற்கு முன்னதாக சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சூர்யா 'சூரரைப் போற்று' என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்து சூர்யா சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றிருந்தார். 

இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் சூர்யா 43 படத்தில் நடிகர் துல்கர் சல்மான், நடிகை நஸ்ரியா ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் 2d என்டர்டைன்மென்ட் தெரிவித்துள்ளது. இதனால் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suriya 43 update release 


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->