அஜித்குமாரின் அடுத்த படத்தை இயக்கும் உதயநிதி ஸ்டாலின் - வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்.!
uthayanithi stalin and ajith kumar new movie update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற பிப்ரவரி மாதம் 6-ந் தேதி வெளியாக உள்ளதனை தொடர்ந்து நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63-வது படமான 'குட் பேட் அக்லி' படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இந்தப் படம் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே நடிகர் அஜித் குமார் துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் தனது அணியுடன் கலந்து கொண்டு மூன்றாவது இடம் பிடித்து அசத்தினார்.
இதையடுத்து ஐரோப்பிய கார் பந்தயத்தில் கலந்து கொள்ளவுள்ளார். அதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே நடிகர் அஜித் கார் பந்தயத்தின் போது இனிமேல் வருடத்திற்கு ஒரு படம் தான் நடிக்க போகிறேன் என்றுத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அஜித் குமார் அடுத்ததாக நடிக்க உள்ள புதியபடம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க உள்ளதாகவும், இந்தப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
uthayanithi stalin and ajith kumar new movie update