கர்நாடகத்தில் ரீ ரிலீஸ் வசூல் சாதனை படைத்த ''வாரணம் ஆயிரம்''!
Vaaranam Aayiram movie Rerelease collection
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கலந்து 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ''வாரணம் ஆயிரம்''.
அப்பா மகள் உறவின் நெருக்கத்தை மையமாகக் கொண்டு உருவாகிய இந்த திரைப்படத்தில் சூர்யா அப்பாவாகவும் மகனாகவும் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் காதல், பிரிவு போன்ற உணர்ச்சிகளின் வேகத்தை அதிகரிக்க கூடியதாக இன்றும் ரசிகர்களிடையே நீடிக்கிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம் சென்னையில் பிரபல திரையரங்கத்தில் மறு வெளியீடு செய்யப்பட்டது.
![](https://img.seithipunal.com/media/varnam-wmsny.jpg)
இதனைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் இந்த திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டு வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடகத்தில் மறு வெளியீடு செய்யப்பட்டு வசூலில் சாதனை படைத்த முதல் படம் இதுதான் எனவும் இதுவரை ரூ. 75 லட்சத்திற்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும் படக்குழு போஸ்டர் ஒன்று வெளியிட்டு அறிவித்துள்ளது.
English Summary
Vaaranam Aayiram movie Rerelease collection