புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஏற்று கொள்ள வேண்டும்..ஜோர்டான்,எகிப்து நாடுகளுக்கு புதிய டிரம்ப் உத்தரவு!
Refugees should be accepted. Trump orders new Jordan Egypt
காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகள் ஏற்று கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதிபாலஸ்தீனத்தின் காசா பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையேயான மோதல் போக்கானது பல வருடங்களாக நீடித்து வரும் சூழலில் இந்த தாக்குதலில் இஸ்ரேல்கடுமையாகபாதிக்கப்பட்டது.ஆயிரக்கணக்கானோரைகொன்றுகுவித்தும்,நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றனர்.
ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் இந்த தாக்குதலில், காசா பகுதியில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர்.இதையடுத்து அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மேற்கொண்ட மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் பலனாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், காசாவில் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பணய கைதிகள் அனைவரும் வருகிற சனிக்கிழமை மதியத்திற்குள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அப்படி அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால், போர்நிறுத்த ஒப்பந்தத்தினை ரத்து செய்து விடுவேன் என கூறியுள்ளார்.
மேலும் காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகள் ஏற்று கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் இதனை ஏற்கவில்லை என்றால், அந்நாடுகளுக்கான உதவியை நிறுத்தி வைக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
English Summary
Refugees should be accepted. Trump orders new Jordan Egypt