மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் உறுப்பினர்கள் சேர்க்கை..நேரு எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்!
Enrolment of members of Manithaneya People's Service Movement.. Nehru MLA inaugurates!
மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் உறுப்பினர்கள் சேர்க்கையை இயக்க நிறுவனத் தலைவர் நேரு எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்,
புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை விழாஇன்று நடைபெற்றது.இந்தவிழாவில் மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் உறுப்பினர்கள் சேர்க்கையை இயக்க நிறுவனத் தலைவர் நேரு எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்,
மேலும் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்து நடத்தும் மனிதநேய மக்கள் சேவை இயக்கத்துடன் தோளோடு தோல் நின்று மக்களுக்கான பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து புதுச்சேரியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது இந்த இயக்கத்தோட நோக்கம் என தெரிவித்துள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/nehru-hcv6g.jpg)
மேலும் ஊழல் இல்லாத நல்லாட்சி வழங்குவது, மாணவ மாணவிகளுக்கு சிறப்பான கல்வி வழங்குவது, ஏழை எளிய மக்கள் வாழ்வில் வளர்ச்சி பெறுதல், சுத்தமான குடிநீர், சுகாதாரமான உயர் மருத்துவ சிகிச்சைகள் வழங்குவது போன்ற உயரிய நோக்கத்தோடு மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது என நிறுவனத் தலைவர் நேரு எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
English Summary
Enrolment of members of Manithaneya People's Service Movement.. Nehru MLA inaugurates!