தனுஷ் ரசிகர்களே தயாரா.? வெளியானது வாத்தி பட இசை வெளியீட்டு விழா தேதி.! - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷின் வாத்தி பட இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 4-ம் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்குகின்ற திரைப்படம் தான் வாத்தி. இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கும் இந்த திரைப்படம் தெலுங்கில் நேரடியாக வெளியாக இருக்கின்றது. 

இது தெலுங்கில் சார் என்ற பெயரிலும், தமிழில் வாத்தி என்ற பெயரிலும் வெளியிடப்பட இருக்கிறது. இதில், சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடிக்கின்றார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்ற இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இத்தகைய நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்க உள்ளதாக கூறப்பட்டது. அந்த வகையில், வரும் பிப்ரவரி 4-ம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaththi audio launch date


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->