அதிரடியான திருப்பங்களுடன் முடிவுக்கு வருகிறதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மூன்று வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசத்தையும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை மையமாகக் கொண்ட இந்த தொடரானது  வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு ஆளுக்கு ஒரு திசையாக சென்று விட்டார்கள். ஜீவா தன் மாமனாரின் பேச்சை கேட்டு அவரது வீட்டிற்கு சென்று விட்டார். கண்ணன் தனியாக வேறொரு வீட்டில் குடியேறி வசித்து வருகிறார். ஊர் மெச்சும்படி ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்த குடும்பம் தற்போது வேறு வேறு இடங்களுக்கு  பிரிந்து சென்றது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இனி வரக்கூடிய வாரங்களில் இந்த அண்ணன் தம்பி மூவரும் தங்களுக்கு எதிராக பிண்ணப்பட்டிருக்கும் சதிவலைகளை கடந்து தங்களது பாசப்பிணைப்பினால்  ஒன்றிணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜீவா தன் மாமனாரின் சதியை புரிந்து கொண்டு  மீண்டும் அண்ணனிடம் திரும்பி விடுவார். கண்ணனும் தனது பாசத்தின் காரணமாக அண்ணனிடம் வந்து விடுகிறார் என்பது போல கதைக்களம் நகரும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அண்ணன் தம்பிகள் மூவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து வர பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் முடிவுக்கு வருமென அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வருகின்ற ஜூன் மாதம் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vjay tv successful serial pandian store will end soon as per the reports of an unknown source


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->