முன்னாள் காதலியை பழிவாங்க சிம்பு இப்படி எல்லாமா செஞ்சாரு.? அதிர்ச்சி செய்தி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் எஸ்டிஆர் என்ற சிலம்பரசன். தமிழ் சினிமாவில் சிம்பு என்று அன்பாக அழைக்கப்படும் இவர் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை நிரூபித்தவர். சமீபத்தில் வெளியான இவரது பத்து தல திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுத் தந்தது.

இந்நிலையில் சிம்புவை பற்றிய புதிய  செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த செய்தியின் படி சிம்பு மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர்  காதலித்து வந்தது நாம் அறிந்ததே. இவர்களுக்கிடையே ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷுடன் திருமணம் செய்து கொண்டார். இதனால் காதல் தோல்வியிலிருந்து சிம்பு தன் காதலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வெறுப்பு ஏற்றுவதற்காக ஒரு சில காரியங்களை செய்து இருக்கிறார் அது தற்போது செய்தியாக வெளியாகி இருக்கிறது. அந்த செய்திகளின்படி சிம்புவை விட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு வயது மூத்தவர் என்பதால் அவரை வெறுப்பேற்ற வேண்டும் என்றே தன்னை விட வயது மூத்த ஹீரோயின்களுடன் சிம்பு திரைப்படங்களில் நடித்ததும் அவர்களை கலாய்த்து வந்ததும் தற்போது வெளியாகி இருக்கிறது. அவர்கள் எந்த ஹீரோயின்கள் என்னென்ன படங்களில் சிம்புவுடன் நடித்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

சோனியா அகர்வால்: 

ஹரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கோவில். இந்தத் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருப்பார் சோனியா அகர்வால். இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகள் அற்புதமாக இருக்கும். சோனியா அகர்வால் சிம்புவை விட ஒரு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிகா:

சிம்பு  தனக்கு பிடித்தமான ஹீரோயினான ஜோதிகாவுடன் மன்மதன் மற்றும் சரவணன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஜோதிகா சிம்புவை விட 4 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வயது வித்தியாசமே தெரியாத அளவிற்கு இவர்கள் இருவருக்கும் கெமிஸ்ட்ரியும் இரண்டு படங்களிலும் அற்புதமாக இருக்கும்.

ரீமா சென் : 

வல்லவன் திரைப்படத்தில் சிம்புவின் பள்ளி பருவ காதலாக நடித்திருப்பார் ரீமாசென். மேலும் அந்த திரைப்படத்திலும் சிம்புவை விட ஒரு வயது மூத்தவராக நடித்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் வில்லியான அரிமா சென்னை சிம்பு கலாய்ப்பது போன்ற காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கும்.

என்னதான் சிம்பு தனது முன்னாள் காதலியை வெறுப்பேற்றினாலும் சிம்புவை வைத்து ஒரு படத்தையாவது இயக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறி வருகிறாராம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What Simbu did to take revenge on his ex-girlfriend is a shocking news


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->