ஹீரோவானார் யூட்யூபர் மதன் கௌரி.! இயக்குனர் இவரா.?!  - Seithipunal
Seithipunal


ஒரு கல்லூரியின் கதை எனும் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர்தான் நந்தா பெரியசாமி. அதன்பின் ஆனந்தம் விளையாடும் வீடு, மாத்தி யோசி உள்ளிட்ட திரைப்படங்களை அவர் இயக்கியிருக்கிறார்.

இந்த நிலையில், நந்தா பெரியசாமி இயக்குகின்ற தேடி தேடி பார்த்தேன் என்ற திரைப்படத்தில் மதன் கௌரி நடித்திருக்கின்றார். இவருக்கு நிறைய ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. இவரது youtube சேனலுக்கு எக்கச்சக்க ஃபாலோயர்கள் இருக்கின்றனர். 

அவர் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்த நிலையில் அவர் நன்றாக பெரியசாமி படத்தில் நடிக்க இதில் ஹீரோயினாக நடிகை ஸ்ரீரிதா ராவ் நடித்திருக்கிறார். 

கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு தாரன்குமார் இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கின்றது. 

இதன் இசை விரைவில் வெளியாகும் என்று பட குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதன் கௌரி நடிக்கும் முதல் படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

YouTuber mathan Gowri as hero


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->