புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? ஆன்மீகமும் அறிவியலும்!
Why not eat non veg in the month of Puratasi Spirituality and Science
முதலில், ஆன்மீக காரணம்: இந்து மதத்தில் அனைத்து மாதங்களும் அனைத்து நாள்களும் இறைவனுக்கு உகந்த நாளாக இருந்தாலும் புரட்டாசி மாதம் மிகவும் புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது, குறிப்பாக பெருமாள், விஷ்ணு பக்தர்களுக்கு மிக முக்கியமான மாதம் . இந்த மாதத்தில் பெருமாளை வழிபடுவது ஒரு மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது.
பக்தர்கள் தங்கள் உடல் மற்றும் மனதை தூய்மையாக வைத்திருக்க, அசைவம் சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். இது உங்களுக்கு ஆன்மீக பலம் தருவதுடன், உங்கள் மனதுக்கு அமைதியையும் உருவாக்குகிறது. இறைவனின் அருளைப் பெற, சைவ உணவு உட்கொண்டு மனத்தையும் தூய்மைப்படுத்துவது எனக் கருதப்படுகிறது.
அதே சமயம் இந்த புரட்டாசி மாதம் விவசாயத் தொழிலில் மிக முக்கியமான காலமாகும். விவசாயத்தை பயன்படும் பசுமாடுகளை பாதுகாக்கும் நோக்கத்துடன், இம்மாதத்தில் அவற்றை வதை செய்யாமல், அசைவம் சாப்பிடுவதிலிருந்து விலகுகிறார்கள். இது பசுக்களின் பாதுகாப்பிற்கு ஒரு பொது ஒழுங்காகவும், சமூகத்தின் நலனாகவும் பார்க்கப்படுவதாக ஆன்மீகவாதிகள் பலரும் தெரிவிக்கின்றனர்.
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? அறிவியல் ரீதியாக பார்தோம்மே ஆனால்,புரட்டாசி மாதம் பருவமாற்றம் ஏற்படும் தருணமாகும். பருவமாற்றத்தின் போது, உடல் சூழலுக்கு ஏற்ற மாதம் இல்லை. இந்த மாதத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து காணப்படும் அதனால் எளிதில் நம்பை வைரஸ் போன்றவைக்கள் தாக்கும் என்பதால் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது அல்ல என்று கூறப்படுகிறது.
அசைவ உணவுகள் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அசைவ உணவுகள் மலச்சிக்கல், வயிற்றுப் பிரச்சனைகள், போன்றவைகள் வருவதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கும். எனவே, சைவ உணவு சீரான நலனை வழங்குகிறது. இது உடலுக்குப் பெரும்பயன்களை அளிக்கக்கூடியதாக இந்த பருவமாற்றம் அடைந்த புரட்டாசி மாதம் கருதப்படுகிறது.
சுத்தமான மனமும் அமைதியான ஆன்மீக அனுபவமும்:
சைவ உணவுகள் உங்களை ஆரோக்கியமாகவும், மனநலத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. இது யோகம், தியானம் போன்ற ஆன்மிக செயல்பாடுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனால், மனநிலை நிலைத்திருக்க, உங்களை நம்பிக்கையுடனும் ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ளலாம்.அசைவத்தைத் தவிர்க்கும் இந்த ஆன்மிக வழிபாட்டிலும் அறிவியல் அடிப்படையிலும் புரட்டாசி மாதத்தின் சிறப்பு மேலோங்கி நிற்கிறது. ஆன்மிகம், அறிவியல் இரண்டு துறைகளின் நன்மைகள் நம் உடல், மனசுக்கு ஆரோக்கியத்தை வழங்குவதாக கூறப்படுகிறது.
இன்று ஆயிரம் அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்து இதை தெரிவிக்கலாம்.ஆனால்,நம் முன்னோர்கள் எந்த ஒரு அறிவியல் சாதனமும் இல்லாமல் இதனை நமக்கு தெரியப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். நம் முன்னோர்கள் எதை சொல்லிருந்தாலும் அது அனைத்து நமது நன்மைக்கே!
English Summary
Why not eat non veg in the month of Puratasi Spirituality and Science