யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு;விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீட்டிப்பு! - Seithipunal
Seithipunal


யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் பிப்ரவரி 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.முதல்நிலை தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் ஐப்எஸ் தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி இறுதியில் வெளியானது. இந்தநிலையில் இதற்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன்11.02.2025 முடிவடையும் நிலையில், விண்ணப்பிக்க கால அவகாசம் பிப்ரவரி 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது.தேர்வு முறை: முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டமாக நடைபெறும்.மொத்த காலிப்பணியிடங்கள்:1129உள்ளன.

பணி விவரம்:சிவில் சர்வீஸ் பிரிவில் 979 காலிப்பணியிடங்கள் மற்றும் ஐஎப்எஸ் பிரிவில் 150 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு முதல்நிலை தேர்வு மே மாதம் நடைபெறவுள்ளது என்றும்  இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்விற்கு தகுதி அடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யுபிஎஸ்சி குடிமை பணிகள் சிவில் சர்வீஸ தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரும் பிப்ரவரி 11-ம் தேதி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் பிப்ரவரி 18-ம் தேதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்ப திருத்த அவகாசம் 19.02.2025 முதல் 25.02.2025 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வைஎழுததேர்வர்களுக்கு21வயதுபூர்த்திஅடைந்திருக்கவேண்டும்.அதிகபட்சமாக 32 வயதை கடந்திருக்கக் கூடாது.எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும் வயது வரம்பில் தளர்வு உள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வரை தளர்வு உள்ளது.

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை எழுத அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக கீழ் ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.இந்திய வன சேவைகள் (IFS) தேர்விற்கு கால்நடை பராமரிப்பு & கால்நடை மருத்துவ அறிவியல், தாவரவியல், வேதியியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல் ஆகிய ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விவசாயம், வனவியல் ஆகிய பாடங்களில் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எஸ்சி/எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் இத்தேர்வை எழுதலாம். ஒபிசி பிரிவினர் 9 முறை மட்டும்தான் எழுத முடியும். அதே போன்று மாற்றுத்திறனாளிகள் பொதுப் பிரிவு, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஒபிசி பிரிவு 9 முறை எழுதலாம். பொதுப் பிரிவினர் 6 முறை எழுதலாம்.

யுபிஎஸ்சி குடிமை பணிகள் மற்றும் இந்திய வன சேவை தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://upsconline.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதில் OTR Profile பதிவு செய்து, பின்னர் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள்:18.02.2025 மாலை 6 மணி வரைவிண்ணப்பம் திருத்தம் செய்ய:19.02.2025 - 25.02.2025முதல்நிலை தேர்வு25.05.202அட்மிட் கார்டுபின்னர் வெளியிடப்படும்.முதல்நிலை தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது ஏற்படும் சந்தேகங்களுக்கு நேரடியாக யுபிஎஸ்சி-யை 011-23385271/011-23381125/011-23098543 ஆகிய தொலைப்பேசி எண்களில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UPSC Civil Services Exam; More time to apply!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->