யுஜிசி புதிய விதிகள் அரசியல் சட்டத்துக்கு எதிரானது: மஹுவா மொய்த்ரா எதிர்ப்பு! - Seithipunal
Seithipunal


புதிய விதிகள் அரசியல் சட்டத்துக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் விரோதமானவை என்றும் ஒன்றிய அரசின் கைகளில் அதிகாரத்தைக் குவிக்க புதிய வரைவு விதிகளை வகுத்துள்ளது யுஜிசி என்று மஹுவா மொய்த்ரா கூறினார்.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு அதாவது யு.ஜி.சி. சமீபத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. மேலும் அதில் துணை வேந்தர்களை நியமனம் செய்ய கவர்னருக்கே அதிகாரம் உண்டு என்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழு தலைவராக கவர்னர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக யுஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பார்கள் என கூறியிருந்தது. மேலும் மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. யு.ஜி.சி. சமீபத்தில் இந்த புதிய விதிமுறையால் மாநில அரசு பரிந்துரைக்கும் உறுப்பினர் இனி இடம்பெற முடியாது என்பது உறுதியாகி உள்ளது.

மேலும் இந்த மாற்றங்கள் துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசின் உரிமையை மறுக்கிறது என்றும் அதனால் யுசிஜி புதிய விதிகளின் வரைவு அறிக்கையை திரும்ப வேண்டும் என தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மக்களவையில் யுஜிசி புதிய விதிகளின் வரைவு அறிக்கையை விமர்சித்து பேசினார். அப்போது இது தொடர்பாக மக்களவையில் மஹுவா மொய்த்ரா கூறியதாவது:-புதிய விதிகள் அரசியல் சட்டத்துக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் விரோதமானவை என்றும் 
ஒன்றிய அரசின் கைகளில் அதிகாரத்தைக் குவிக்க புதிய வரைவு விதிகளை வகுத்துள்ளது யுஜிசி என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்,புதிய வரைவு விதிகளில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான தேடுதல் குழு அமைக்கும் நடைமுறையை மாற்ற முயற்சிக்கின்றனர் என்றும் துணைவேந்தர் தேடுதல் குழுவில் மாநில அரசின் பிரதிநிதிக்கு புதிய விதிகள் இடமளிக்கவில்லை என்றும் இவ்வாறு மஹுவா மொய்த்ரா மக்களவையில் எதிர்ப்பை பதிவு செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New UGC rules unconstitutional: Mahua Moitra By PTI .


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->