மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ள 4 - 9ம் வகுப்பு தேர்வு: காரணம் என்ன?  - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் வருகின்ற 23ஆம் தேதி பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா நடைபெற உள்ளதால் அன்று நடைபெற உள்ள சமூக அறிவியல் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. 

இந்நிலையில் பள்ளி கல்வித்துறை இயக்குனரின் அனுமதி பெற்று வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடத்தப்படாது எனவும் அதற்கு மாறாக ஏப்ரல் 24ஆம் தேதி தேர்வு நடைபெறும் எனவும் மதுரை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தொடக்கக்கல்வி இயக்குனரின் இணை செயல்முறைகளின் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான 1 முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி இறுதி தேர்வுகள் நடத்த அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் 4 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 10.04.2024 அன்று நடைபெற இருந்த அறிவியல் தேர்வு 22.4.2024ஆம் தேதி, 12.4.2024 அன்று நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு 23.4.2024ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

தற்போது மதுரை மாவட்டத்தில் வருகின்ற 23ஆம் தேதி சித்திரை திருவிழாவை முன்னிட்டு 23ஆம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4th to 9th class exam date change


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->