ஒமைக்ரான் எதிரொலி : தமிழக பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவதில் திடீர் திருப்பம்.! சற்றுமுன் அமைச்சர் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஒமைக்ரான் வைரஸ் தொற்று தமிழகத்தில் வந்துள்ள நிலையில், ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை, தினசரி வகுப்புகள் துவங்குவதில் மாற்றம் ஏற்படுமா? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சற்று முன்பு பேட்டியளித்துள்ளார்.

ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தினமும் வகுப்புகள் நடத்துவது குறித்து, டிசம்பர் 25ஆம் தேதி மீண்டும் ஆலோசனை செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று வந்துள்ளதால், முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 3ஆம் தேதி முதல் சுழற்சி முறை இன்றி, தினமும் வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு புதிய ஊரடங்கு தளர்வு அறிவிப்பின் போது அறிவித்திருந்த நிலையில், வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இந்த ஆலோசனைக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister say about daily school issue for omicron issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->