கவனத்திற்கு... நெருங்கும் பொதுத்தேர்வு... மாணவர்களுக்கான சில டிப்ஸ்.! - Seithipunal
Seithipunal


தேர்வுக்கு குறைவான நாட்களே உள்ளதால் மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். என்னதான் நாம் தேர்வுக்காக பார்த்து பார்த்து தயாரானாலும் கடைசி நிமிட குறிப்புகளை நாம் தயார் செய்யாவிட்டால் அது உதவியாக இருக்காது. 

தேர்வுக்காக இரவு முழுவதும் கண்விழிப்பது நம்மை மட்டும் அல்ல, நமது பெற்றோர்களுக்கும் கவலை, பசியின்மை மற்றும் தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது.

இவற்றை சமாளிக்கவும், தேர்வுக்கு பயமின்றி தயாராவதற்கான சில டிப்ஸ்களை பற்றி பார்க்கலாம் வாங்க...

தேர்விற்காக... சில டிப்ஸ்:

குறித்த நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையத்திற்கு சென்று விட வேண்டும்.

அப்போது தான் இறுதி நேரத்தில் ஏற்படும் பதற்றத்தை தவிர்த்து கொள்ள முடியும்.

தேர்விற்கு முந்தைய நாளே தேர்விற்கான எழுது பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கூடுதலாக ஒரு பேனாவை கையில் வைத்திருந்தால் தேர்வறையில் உதவும்.

தேர்விற்கு முந்தைய இரவு அதிகம் கண்விழித்து படிப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

தேர்வு காலங்களில் அதிகம் பழங்கள் ரூ காய்கறிகளை உணவாக எடுத்து கொள்ள வேண்டும்.

அதிகளவில் நீர் பருக வேண்டும்.

தேர்வறைக்கு செல்லும் முன் சிறு காகித துண்டு துணுக்குகள் உள்ளனவா? என்பதை நாமே சுய பரிசோதனை செய்து தன்னம்பிக்கையுடன் தேர்வறைக்கு செல்ல வேண்டும்.

தேர்வுக்கு முன் திட்டமிடல் மற்றும் நேர மேலாண்மை மிகவும் அவசியம்.

வினாத்தாள் படிக்கும் 10 நிமிடம் மிக முக்கியமான தருணம். சலனமின்றி வினாத்தாளை படியுங்கள். 

வினாத்தாள் எவ்வளவு கடினத்தன்மை மிக்கதாய் இருப்பினும் பதற்றம் கொள்ள வேண்டாம். நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும்.

தேர்வு தாளில் கையொப்பமிட மறக்க வேண்டாம்.

தேர்வு முடிந்த பிறகு வினாத்தாள் பற்றி கலந்துரையாடலை தவிர்க்கவும். ஏனென்றால் எழுதியவை மாறப்போவதில்லை.

ஒரு தேர்வு முடிந்த பிறகு சிறு உறக்கம் எடுத்து கொண்டு புத்துணர்வுடன் அடுத்த தேர்விற்கு படிக்கவும்.

விடுமுறை நாள் சோம்பலை தவிர்க்க குழுவாக படியுங்கள் அல்லது பள்ளி சென்று படியுங்கள்.

தேர்வின் இறுதி நேரத்தில் படித்ததை மீள்பார்வை செய்யுங்கள். புதியவற்றை எதுவும் படிக்க வேண்டாம்.

தேர்வை மயிலிறகை போல மென்மையாய் அணுகவும். மகிழ்வாய் தேர்வினை எழுதுங்கள்.

உங்களுக்கு வழிகாட்டியான பெற்றோர் அல்லது ஆசிரியர்களிடம் ஆசி பெற்று செல்லுங்கள். கூடுதல் நம்பிக்கை பிறக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Public Exam Tips part 5


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->