#BigBreaking || 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் திடீர் திருப்பம்.! சற்றுமுன் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு.!
tn school board exam may 2022
10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு (Priority Syllabus) குறைக்கப்பட்ட பகுதியில் உள்ள பாடங்கள் முழுவதில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்று, தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், பாடத்திட்ட விவரங்கள் http://dge.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக, தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், 2021-2022 - ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் மே -2022 மாதத்தில் நடைப்பெறவுள்ளது.
இத்தேர்விற்கான வினாக்கள் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட முன்னுரிமை பாடத்திட்டத்தில் (priority syllabus- குறைக்கப்பட்ட) உள்ள பாடங்கள் முழுவதிலிருந்தும் கேட்கப்படும்.
இப்பாடத்திட்டம் அரசுத்தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் (www.dge.tn.gov.in) -Notification " - என்ற பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது.
English Summary
tn school board exam may 2022