மகளிர் உரிமைத் தொகை பெற ஓர் அறிய வாய்ப்பு..!
womens apply 1000 rs scheme
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 1.16 கோடி பெண்கள் பயன் பெறுகிறார்கள். சில பெண்கள், தங்கள் தகுதிகளுடன் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கவில்லை.
அப்படி விண்ணப்பித்தாலும், அது தவறுதலாக இருந்ததால் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு உள்ளது. அதாவது இந்த திட்டத்திற்கு தகுதியான பெண்களுக்கு, ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்குள் வருமானம் இருக்கும் குடும்ப தலைவிகள், 5 ஏக்கருக்குக் குறைவான நிலம் அல்லது 10 ஏக்கருக்குக் குறைவான புன்செய் நிலம் கொண்ட குடும்பத் தலைவிகள் விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தில் இணைந்து ரூ.1,000 பெற விரும்புவோர், 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், செப்டம்பர் 15, 2002-க்கு முன்னர் பிறந்தவர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள். இந்தத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அரசு தீவிர கவனம் செலுத்தி, மாநில அளவில் கண்காணிப்பு குழு அமைத்து, அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்பங்களை ஏற்கிறது.
English Summary
womens apply 1000 rs scheme