பீகாரில் தமிழக கடை முன்பு செல்பி - வைரலாகும் பிரதமர் மோடியின் புகைப்படம்.!
pm modi selfie with front of tamizhar shop in bihar
இன்று பழங்குடியின தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் 150வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை பழங்குடியினரின் பெருமித தினமாக மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையில், பிர்சா முண்டாவின் பிறந்தநாளையொட்டி, பீகார் மாநிலம், ஜமுய் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அங்கு அவரை பழங்குடியின மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அப்போது பழங்குடியின மக்களின் இசை வாத்தியத்தை கண்டு ஆச்சரியம் கொண்ட பிரதமர் மோடி, அதை வாங்கி தானும் இசைத்து மகிழ்ந்தார்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடந்த கண்காட்சியில், பழங்குடியின மக்களின் பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதில், தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தர்மதுரை, எழிலரசி தம்பதியினர் கடை ஒன்றை அமைத்திருந்தனர். பிரதமர் மோடி அங்கு வந்தபோது, தமிழக பழங்குடியின தம்பதியினர், தாங்கள் காட்சிக்கு வைத்திருந்த பொருட்களை பற்றி கூறினர்.
பின்னர் அவருடன் ஒரு செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தங்களின் விருப்பத்தை தெரிவித்தனர். உடனே பிரதமர் மோடி அவர்களுடன் ஒரு செல்பி போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
pm modi selfie with front of tamizhar shop in bihar