நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு! மக்களை முட்டாள் ஆக்க நினைத்து முட்டாளாகிய கங்குவா படக்குழு! அட்டர் பிளாப்! - Seithipunal
Seithipunal


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் கங்குவா திரைப்படம் முதல்லே அட்டர் ப்ளோப் ஆகியுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பாக படக்குழு 2,000 கோடி.தமிழின் முதல் பான் இண்டியா ஹிட் இதுதான் - கட்டுப்படுத்த முடியாத காட்டாறு - சிறுத்தை.இந்தியாவே வாயை பிளந்து பார்க்கும்.திரை தீப்பிடிக்கும்.100 தடவை பாத்துட்டேன் .சூர்யா அரசியலுக்கு வரனும்.உலகிலேயே சிறந்த நடிகர் சூர்யாதான்.

38 மொழிகள். 11,500 ஸ்க்ரீன்கள்..2 hrs 10 mnts Goosebumps ஆக இருக்கும்.மரத்துல ஏற சொன்னா உடனே சூர்யா சார் சரசரன்னு ஏறிடுவார். இந்திய சினிமாவில் பார்க்காத பயங்கரமான சண்டை சீன் இதுல இருக்கு..என்றேல்லாம் வாய்க்கு வந்ததை பேசி மக்களை ஏமாற்றும் வேலையில் சிவகுமார் குடும்பத்துடன் சேர்ந்து பலரும் பொய்களை கூறி வந்தனர்.

இந்த உருட்டுகளுக்கு மத்தியில் நேற்று கங்குவா திரைப்படம் உலமெங்கும் ரீலீஸ் ஆன நிலையில், முதல் நாளே படம் அட்டர் பிளாப் என்றுதான் சொல்ல வேண்டும். படத்தை பார்த்துவிட்டு தியேட்டரைவிட்டு வெளியவந்த அனைவரும் படத்தை குறித்தும் படம் குறித்து படக்குழு உருட்டிய உருட்டுகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

அதுவும் இப்படத்தை பான் இந்தியா படமாக உருவாக்கி இருந்ததால், படத்தின் ரிலீசுக்கு ஒரு மாதம் முன்னரே புரமோஷன் பணிகளை தொடங்கிய சூர்யா, இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு படத்தை புரமோஷன் செய்தார். படம் நெருப்பு மாதிரி இருக்கும் என்றும் பில்டப் கொடுத்திருந்தார்.

இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கங்குவா திரைப்படம் நேற்று உலகமெங்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் ஆனது. சூர்யா கொடுத்த பில்டப்பை நம்பி கங்குவா படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு அப்படம் பேரிடியாக அமைந்தது. படம் முழுக்க சூர்யா கத்திக் கொண்டே இருப்பதாகவும் இதனால் தலைவலி தான் வருகிறது எனவும் படம் பார்த்த ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

மேலும் காமெடி என்கிற பெயரில் யோகிபாபுவும், ரெடின் கிங்ஸ்லியும் செய்யும் கிரிஞ்சான விஷயங்கள் பொறுமையை சோதிக்க வைப்பதாகவும் கதறி வருகின்றனர்.முதல் ஷோ முடிந்ததுமே கங்குவா திரைப்படத்தின் ரிசல்ட் தெரிந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.

படம் படு நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருவதால் சூர்யாவின் கெரியரில் இது மிகப்பெரிய தோல்வி படமாக இருக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மக்கள் யாரும் த்யேட்டர் போகி நேரத்தை வீணடிக்கவேண்டாம் என படம் பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The dog also survives this survival Ganguwa film crew who thought to make people stupid Atter Blap


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->