டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 2 assistance case manager exam
குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை II பதவியின் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை 13.09.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இத்தெரிவிற்கான கணினிவழித் தேர்வு 14.12.2024 அன்று பிற்பகல் 15 மட்ட 4186 தேர்வர்களுக்கு நடத்தப்பட்டது. சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் சில தேர்வர்களால் இந்த தேர்வினை முழுமையாக முடிக்க இயலவில்லை.
இதனைத் தொடர்ந்து தேர்வர்களிடமிருந்து மறுதேர்வு நடத்திட வேண்டி தேர்வாணையத்தில் கோரிக்கை பெறப்பட்டது. தேர்வர்களின் கோரிக்கையினை தேர்வாணையம் முறையாக பரிசீலனை செய்து அதனை எற்று, மேற்கண்ட பதவிக்காக 14.12.2024 பிற்பகல் நடைபெற்ற கணினிவழித் தேர்வினை தேர்வாணையம் ரத்து செய்தது.
மேலும், ஏற்கனவே இத்தேர்விற்காக தேர்வாணையத்தால் அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மறுதேர்வு 22.02.2025 அன்று ஒளிக்குறி உணரி (OMR) முறையில் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மறுதேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும் பின்னர் தனியே தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த தேர்விற்கு வருகைபுரியாத தேர்வர்களும், 22.02.2025-ல் நடைபெறவுள்ள மறுதேர்வை எழுதலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in
English Summary
TNPSC Group 2 assistance case manager exam