தளபதி 69 படத்தின் டைட்டில் ரிலீஸ்; GOAT படம் குறித்து பா.ரஞ்சித் கருத்து..!
Thalapathy 69 title release
நடிகர் விஜய், ஹெச் வினோத் இயக்கும் படத்தில் தனது இறுதி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு விலகவுள்ளதாக அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து முழு நேர அரசியலில் ஈடுப்படவுள்ளார். விஜயின் இறுதி படத்துக்கு இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு இணையவுள்ளதாகவும், இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது. இப் படத்தில் இடம்பெறும் ஒரு பிரம்மாண்டமானப் பாடல் காட்சியை முதலில் இயக்குனர் வினோத் எடுத்துள்ளார்.
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி வந்தது. ஆனால் தற்போது பொங்கல் பண்டிகைக்குதான் டைட்டில் வெளியிடப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் GOAT வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இப்படத்தின் மீது பல விதமான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரபல இயக்குனர் பா. ரஞ்சித், GOAT படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், " GOAT படத்திற்கு ஆதரவாக விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இல்லை. ஆனால், இப்படம் வசூலில் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது.
GOAT படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் தான் அதிகமாக வந்தது. படத்தை காலி செய்ய முயற்சி செய்தனர். ஆனால், அது எதுவும் கைகொடுக்க வில்லை, மக்கள் படத்தை தியேட்டரில் பார்த்து கொண்டாடினர்" என கூறியுள்ளார்.
English Summary
Thalapathy 69 title release