பாலிவுட்டை நினைத்தாலே அருவருப்பாக உள்ளது; கோலிவூட்டை புகழும்அனுராக் காஷ்யப்..! - Seithipunal
Seithipunal


பாலிவுட் திரையுலகை எண்ணி அருவருப்பாக உணர்கிறேன் என  இந்தி திரையுலகில் முன்னணி இயக்குனரான  அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.

இவர் லியோ திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு பரீட்சயமானதோடு, சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் நீங்க இடம்பிடித்துள்ளார். 

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை மற்றும் மலையாள திரைப்படமான ரைஃபில் கிளப் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.அனுராக் காஷ்யப் இந்தி சினிமாவை விட தென்னிந்திய சினிமாவில் மிகவும் ஆர்வமுடையவர்.

சமீபத்தில் ஒரு பெற்றியில் அவர், " இந்தி சினிமா துறையில் வேலை செய்டு, படங்களை இயக்கி வெறுத்து விட்டேன். புதிதான் எந்த முயற்சியும் அங்கு என்னால் எடுக்கமுடியவில்லை என்றும்  தயாரிப்பாளர்களிடம் போய் சென்றால் வணிக நோக்கத்துடம் மட்டுமே ஒரு திரைப்படத்தை அணுகுகின்றனர் என்று தெரிவித்துள்ளார். 

அத்துடன், ஏற்கனவே ஒரு ஹிட்டான படங்களை மட்டுமே இந்தி சினிமா ரீமேக் செய்யும். புதிதா அவர்கள் எதையும் முயற்சி செய்ய மாட்டார்கள். இதனால் நான் என் வாழ்விடமாக இருந்த மும்பை விட்டு அடுத்தாண்டு  தென் இந்தியாவிற்கு குறியேறவுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்தியா வந்தால் தனக்கு ஒரு தூண்டுதல் கிடைக்கிறது,ஆனால் இங்கு இருந்தால் நான் இப்படியே இருந்து வயதாகி இறந்துவிடுவேன்."என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anurag Kashyap is praising Kollywood


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->