08 ஆண்டுகளாக நீடித்த ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட் பிரச்சினை முடிவுக்கு வந்தது..?
Angelina Jolie and Brad Pitt dispute has come to an end
ஏஞ்சலினா ஜோலியும், பிராட் பிட்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2016-இல் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த விவாகரத்து வழக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஹாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஏஞ்சலினா ஜோலிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
இவர் 2014-ல் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. மேலும் போரில் அகதிகளான 3 குழந்தைகளை தத்தெடுத்தனர்.
அத்துடன், இது நாள் வரை 6 குழந்தைகளின் பொருளாதார செலவை இருவரும் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் பிரான்சில் சொந்தமான வைன் தொழிற்சாலை ஒன்று உள்ளது.
மேலும், 06 குழந்தைகளை யார் கவனிப்பது, தொழிற்சாலையைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக ஒரு முடிவு எட்டப்படாததால் விவகாரத்து வழக்கில் தீர்ப்பு 08 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது
இந்நிலையில், ஏஞ்சலினா மற்றும் பிராட் பிட் இருவரும் இந்த பங்கீடு தொடர்பாக ஒரு முடிவை எட்டியுள்ளனர் ஏஞ்சலினாவின் வழக்கறிஞர், ஜேம்ஸ் சைமன், இருவரும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்ததை தி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் உறுதிப்படுத்தினார்.
English Summary
Angelina Jolie and Brad Pitt dispute has come to an end