டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் முறைகேடு - பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதா என்ற சந்தேகம் தேர்வர்களிடையே எழுந்துள்ளது. 

சமீபத்தில் 5,000 பேருக்கு பணியிடம் வழங்கப்பட்ட நிலையில், தேர்வர்களின் விடைத்தாள் நகல்களை தற்போது டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இதன் பின்னர், பலரின் மதிப்பெண்களில் முரண்பாடுகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

மெயின் தேர்வின் விடைத்தாளுக்கு இரண்டு தனி மதிப்பீட்டாளர்கள் மதிப்பீடு செய்வார்கள். ஆனால், 12 மதிப்பெண்கள் பெற வேண்டிய விடைக்கு முதல் மதிப்பீட்டாளர் 10 மதிப்பெண்கள் கொடுத்திருந்த நிலையில், இரண்டாவது மதிப்பீட்டாளர் வெறும் 0.5 மதிப்பெண் மட்டுமே அளித்திருப்பது தேர்வர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிகிறது.

இதுபோன்ற சுமார் 350 பேரின் விடைத்தாள்களில் மதிப்பெண்களில் பெரிய முரண்பாடுகள் உள்ளதாக தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தேர்வர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். 

இந்த பிரச்சினை தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC Group 2 exam Scam info


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->