ஆளுநர் பதவி ராஜினாமா?., கன்னியாகுமரியில் களமிறங்கும் தமிழிசை! OK சொன்ன அதிமுக., பீதியை கிளப்பும் பரபரப்பு செய்தி! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில், பாஜக வேட்பாளராக, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை அவர்களை காளத்தி இறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் மறைந்த காரணத்தால், அந்த தொகுதிக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 

இந்த இடைத்தேர்தல், தமிழகத்தில் வரவுள்ள சட்டமன்ற பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்பதால், இந்த தொகுதியில் அதிமுக - திமுக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்த உள்ளதாக தெரிகிறது. 

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகிறது. முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன், எனக்கு இது தனக்கு கடைசி தேர்தல் என, வாய்ப்பு கேட்டுள்ளார். 

இந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக தெலுங்கானா ஆளுநரும், முன்னாள் தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் பெயர் தற்போது அரசியல் வட்டாரத்தில் அடிபட்டுள்ளது.  

இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதாலும், எதிர்த்து நிற்கும் வேட்பாளருக்கு பலமான வேட்பாளராக இவர் இருப்பார் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் பெயர் தற்போது அரசியல் வட்டாரத்தில் அடிபட்டுள்ளது. 

மேலும் இவர் வெற்றி பெற்றால் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் பதவி இவருக்கு கிடைக்கலாம் என்றும் பேசப்படுகிறது. மேலும் தமிழிசை சவுந்தரராஜன் பெயரையே அதிமுக மேலிடமும் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may be tamilisai in by election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->