அடடா இதுவல்லவா திராவிட மாடல் ஆட்சி! வஞ்ச புகழ்ச்சியில் வச்சி செய்த வானதி சீனிவாசன்!  - Seithipunal
Seithipunal


பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அடடா இதுவல்லவா திராவிட மாடல் ஆட்சி!

2021- தமிழக முதல்வர் திரு. முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றார். 

2022- ஆவின் பிரிமியம் பாலின் விலை லிட்டருக்கு ரூ.48ல் இருந்து ரூ.60 ஆக 25% உயர்வு.

2022- தமிழகம் முழுவதும் சொத்துவரி 50% உயர்வு. 

2023- ஆவின் 5 லிட்டர் பச்சை மேஜிக் பால் பாக்கெட்டுகளின் விலை ரூ.210-ல் இருந்து ரூ.220 ஆக உயர்வு.

2023- ஆவின் நெய்யின் விலை லிட்டருக்கு ரூ.70 வரை உயர்வு.

2024- தமிழக மக்களுக்கு மின்சாரக் கட்டணம் 2.18% உயர்வு.

2024- சென்னை மாநகராட்சியில் சொத்துவரி 6% உயர்வு. 

தற்போது “என்ட்ரி டேக்ஸ் செஸ்” என்ற பெயரில் கூடுதல் வரியை விதித்து டீசலின் விலையை உயர்த்தவும் பரிசீலனை. 

எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது விலைவாசி உயர்வைக் கண்டித்து தெருவில் இறங்கி போராடுவது, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தபிறகு அதே விலைவாசியை கண்மூடித்தனமாக உயர்த்தி தமிழக மக்களின் வயிற்றில் அடிப்பது இதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா? என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MLA Vanathi condemn to DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->