திரைப்படங்களை இனிமேல் குடும்பத்துடன் பார்க்க முடியாது?...மத்திய திரைப்பட வாரியம் அதிரடி முடிவு! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் திரையரங்குகளில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கு, மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் சான்று வழங்கி வரும் நிலையில், இதுவரை'யு', 'ஏ', மற்றும் 'யுஏ' ஆகிய பிரிவுகளில் சான்றளித்து வந்தது.

இந்த நிலையில், தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப, குறிப்பிட்ட வயதினருக்கு திரைப்படங்களைப் பரிந்துரைக்கும் வகையில் புதிய சான்றளிப்பு முறையை அறிமுகப் படுத்தியுள்ளது.  அந்த வகையில், யு வகை திரைப்படங்கள் அனைத்து வயதினருக்கும் என்று வரையறுக்கப்பட்டு சான்று வழங்கப்பட உள்ளது.

இந்த வரிசையில், ஏ வகை திரைப்படங்கள் 18 வயதினை கடந்தவர்களுக்கு மட்டும் என்று  முன்பு இருந்த நடைமுறையுடன் தற்போது 7, 13, 16 ஆகிய வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உகந்ததாக யுஏ7+, யுஏ 13+, யுஏ 16+ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளின் வயதை கருத்தில் கொண்டு, ஒரு திரைப்படத்தை பார்க்க அனுமதிக்கலாமா அல்லது  வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்கு முன்னதாக, அந்த திரைப்படம் குறித்த  விவரங்களை பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Movies can no longer be watched with family central film board action decision


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->