மிளகின் மருத்துவக்குணம்.!
benefits of milaku
சமையலுக்கு மிகவும் பயன்படும் பொருட்களில் ஒன்று மிளகு. இந்த மிளகில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கிறது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
* ஒரு மிளகாய் சேர்த்தால் உண்ணும் உணவு சுவையாகி போகும்.
* இரண்டு மிளகோடு ஆடாதொடை இலைகளை சேர்த்தால் இருமல், சளி இருக்கும் இடம் தெரியாமல் போகும்.
* மூன்று மிளகோடு வெங்காயம் சேர்thதால் முசுமுசுவென்று முடி முளைக்கும்.
*நான்கு மிளகோடு சுக்கு சேர்த்தால், நெஞ்சுவலி கொஞ்சம் இல்லாமல் போகும்.
* ஐந்து மிளகோடு திப்பிலியும் சுக்கும் சேர்த்தால் கோழையாக நின்று போகும்.
* ஆறு மிளகோடு பெருஞ்சீரகம் சேர்த்தால் நாள்பட்ட மூல நோய்கள் தீரும்.
* ஏழு மிளகை தூள் செய்து சாப்பிட்டால் தொண்டை கம்மலும், புண்ணும் குறைவதோடு, நல்ல பசியும் ஏற்படும்.
* எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்தால் வாந்தி உடனே நிற்கும்.
* ஒன்பது மிளகோடு துளசி சேர்த்து சாப்பிட்டால் ஒவ்வாமை அகன்று ஓடிவிடும்.
* பத்து மிளகோடு பகைவர் வீட்டிலும் பயமில்லாமல் சாப்பிடலாம்.