ராகுல் காந்தி பேக்கில் சோதனை - தேர்தல் அதிகாரிகள் அதிரடி..!
election officers search ragul gandhi bag in maharastra
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமராவதி மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக அவர் ஹெலிகாப்டரில் வந்தார்.
அப்போது தேர்தல் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் இருந்த பேக், ராகுல் காந்தியின் உடைமை உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். இது குறித்து காங்கிரஸ் தலைவர் யசோமதி தாகூர் தேர்தல் ஆணையத்தை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதாவது, ராகுல் காந்தி பேக்கை சோதனையிடும் அதிகாரிகள் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்டோரின் பேக்குகளை சோதனை செய்யாதது ஏன்?.
இதற்கு முன்னதாக உத்தவ் தாக்கரே பேக்கை சோதனை செய்தபோது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்டோர் பேக்குகளை ஏன் சோதனை செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பினார். இதன் பிறகே ஏக்நாத் ஷிண்டு, பட்நாவிஸ், அஜித் பவார் போன்றோரின் பேக்குகளும் சோதனை செய்யப்படுவது போன்ற வீடியோ வெளியானது.
English Summary
election officers search ragul gandhi bag in maharastra