நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சப்போட்டா பழத்தின் நன்மைகள்.!
Benefits of sappotta fruit
சப்போட்டா பழத்தின் வைட்டமின் நார்ச்சத்து கார்போஹைட்ரேட் கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு சத்து பொட்டாசியம் தாமிரம் ஆகிய சத்துக்கள் கொட்டி கிடக்கின்றன.
அதன் காரணமாக சப்போட்டா பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அந்த வகையில் சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
சப்போட்டா பழ கூழுடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து குடித்தால் சளி குணமாகும்.
சப்போட்டா பழம் சாப்பிடுவதால் உடலில் தோல் பளபளப்பாக இருக்கும்.
சப்போட்டா பழம் சாப்பிட்ட பிறகு சிறிதளவு சீரகத்தை மென்று தின்றால் பித்தம் குணமாகும்.
சப்போட்டா பழத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்தும். மேலும் குடல் புற்றுநோயை தடுக்கிறது.
சப்போட்டா பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்சிடண்ட்கள் அதிகம் உள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
சப்போட்டா பழத்தில் அதிக அளவு குளுக்கோஸ் நிறைந்திருப்பதால் அது உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கிறது.
English Summary
Benefits of sappotta fruit