சளி, இருமல் மற்றும் பல் வலிக்கு அரு மருந்தாகும் 'கிராம்பு டீ' - மேலும் என்னென்ன பலன்கள் இருக்கு என தெரிஞ்சுக்கலாம் வாங்க..!!
Health Benefits Of Clove Tea
நம்மில் பலருக்கும் ஒவ்வொரு நாளும் காலை டீயுடன் தான் அந்த நாளே தொடங்கும். டீ தான் பெரும்பாலான வீடுகளில் விரும்பி குடிப்பதாக இருக்கும். அந்த வகையில் கிராம்பு டீ குறித்த ஆரோக்கிய நன்மைகளை இங்கு காண்போம்.
1. குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் தொல்லைகளுக்கு கிராம்பு டீ அரு மருந்தாகும். இதில் ஆன்டி வைரஸ் மற்றும் ஆன்டி செப்டிக் பண்புகள் நிறைந்துள்ளன. இவை சளி, இருமலுக்குக் காரணமான கிருமிகளை எதிர்த்துப் போராடுகின்றன.
2. உங்களுக்கு பல் வலி இருந்தால், கிராம்பு டீ குடித்துப் பாருங்கள். அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ள கிராம்பு டீயானது பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
3. உணவுக்குப் பின்னர் ஒரு 2 அல்லது 3 மணி நேரம் கழித்து கிராம்பு டீ குடித்து வந்தால், செரிமானம் சிறப்பாக நடைபெறும். அஜீரணம், வாய்வுப் பிரச்சினை மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்கும்.
4. கிருமி நாசினிகள் நிறைந்துள்ள கிராம்பு டீயை தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். மேலும் சருமம் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளையும் கிராம்பு டீ போக்கும்.
5. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தினமும் கிராம்பு டீயை குடிக்கலாம்.
6. குளிர் காலத்தில் தினமும் கிராம்பு டீ குடிப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படுவதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும். ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த இந்த கிராம்பு டீயை தினமும் குடித்து, எந்த தொற்று நோய்களும் உங்களை அண்டாமல் காத்துக் கொள்ளுங்கள்.
English Summary
Health Benefits Of Clove Tea