உங்களுக்கு மூட்டு வலி இருக்கா? அப்போ இந்த 'எண்ணையை' உபயோகப் படுத்துங்க..!!
Health Tips For Knee Pain
முன்பெல்லாம் வயதானவர்களுக்குத் தான் மூட்டு வலி வரும். ஆனால் இன்றைய சூழலில் இளைஞர்களும் மூட்டு வலியால் அவதிப் படுகிறார்கள். இப்போதெல்லாம் 30 வயதானாலே மூட்டு வலி கதவைத் தட்டி விடு கிறது.
இதற்காக பல்வேறு விதமான வைத்தியங்கள் இருந்தாலும் மிக எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த மூட்டு வலியை குணப்படுத்த முடியும். அதே சமயம் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த தீங்கும் விளைவிக்காத வகையிலும் இந்த வீட்டு வைத்தியங்கள் இருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு வீட்டு வைத்தியம் தான் "பூண்டு எண்ணெய்". இந்த எண்ணையை தயாரிப்பதற்கு நமது வீட்டு சமையலறையில் எப்போதும் இருக்கும் பூண்டு, கடுகு எண்ணெய் மற்றும் கிராம்பு ஆகியவையே போதும்.
மூட்டு வலிக்கான இந்த எண்ணையை தயாரிக்க முதலில் அடுப்பை மிதமான தீயில் வைத்து, அதில் ஒரு கடாயில் தேவையான அளவு கடுகு எண்ணையை ஊற்றி, அதில் 10 எண்ணிக்கையிலான பூண்டு பற்களை சேர்க்க வேண்டும். மிதமான தீயிலேயே இந்த எண்ணையை பூண்டு நன்றாக கருப்பாக மாறும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியாக கிராம்பை அந்த எண்ணையில் போட்டு, சிறிது நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். இதை இரவு தூங்கும் முன்னர் தினமும் மூட்டுக்களில் தடவி மசாஜ் செய்து வர வேண்டும். மேலும் மசாஜ் செய்வதற்கு முன்பு சிறிது எண்ணையை லேசாக சூடாக்கி பின்னர் தடவி வந்தால் அதிக பலன் கிடைக்கும். இந்த பூண்டு எண்ணெய் மூட்டு வலி மட்டுமல்லாது தசை வலிக்கும், அழற்சி பிரச்சினைகளுக்கும் மிகச் சிறந்த நிவாரணமாக இருக்கும்.
English Summary
Health Tips For Knee Pain