ஒரே ஒரு கிளாஸ் தண்ணீர் தான்.. மொத்த கொழுப்பையும் கரைக்கும்..!! ஆனா அதை எப்போ குடிக்கணும் தெரியுமா?! - Seithipunal
Seithipunal


தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை தான். ஆனால் அது நாம் தண்ணீரை எப்போது குடிக்கிறோம் என்பதில் இருக்கிறது. எடை குறைக்க உடற்பயிற்சி,  உணவுக் கட்டுப்பாடு என்று முயற்சி செய்யும் பலர் இந்த சாதாரண விஷயத்தை அப்படியே கடந்து விடுவார்கள். 

நாம் உணவு சாப்பிடும் முன் ஒரே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தாலே போதும். உடலில் சேரும் கொழுப்புகள் கரைந்துவிடும். பொதுவாகவே தண்ணீர் குடித்தால் வயிறு நிரம்பி விடும். பசி எடுக்காது. மேலும் இது கலோரிகளையும் எரிக்கும். சர்க்கரை கலந்த பழச் சாறுகள் அல்லது வேறு பானங்கள் குடிப்பதற்கு பதிலாக வெறும் தண்ணீர் குடித்தாலே உடல் எடையை பெரிதும் குறைக்கலாம். 

எப்போது, எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

நீங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு 1 அல்லது 2 டம்ளர் தண்ணீர் கண்டிப்பாக வேண்டும். இதனால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். இதையடுத்து உங்களால் நீங்கள் நினைத்தாலும் நிறைய சாப்பிட முடியாது. இந்த வழியில் உங்கள் எடை நிச்சயம் குறையும். 

அதற்காக வெறும் தண்ணீர் மட்டுமே உடல் எடையைக் குறைத்து விடும் என்றும் எண்ண வேண்டாம். உணவிலும்  கட்டுப்பாடு முக்கியம். மேலும் உடல் உழைப்பை அதிகம் கொடுப்பவராக இருந்தால் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். 

நீங்கள் உடல்நிலை சரியில்லாதவராக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்று உங்களின் உடல் செயல்பாட்டிற்கு ஏற்பவும்,உங்கள் உடல் எடையைப் பொருத்தும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று முறையான வழிகாட்டுதலுடன் தண்ணீர் குடிக்கலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Healthy Weight Loss Using One Glass Water


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->