பல மாதங்கள் கெடாமல் இருக்கும் பிரண்டை துவையல்.!
how to make pirandai thuvaiyal
கொடி வகையைச் சேர்ந்த பிரண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இப்படி பட்ட பிரண்டையில் துவையல் செய்வது எப்படி? என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
பிரண்டை
பூண்டு
மிளகாய்த் தூள்
கடுகு
வெந்தயம்
புளி
உப்பு
நல்லெண்ணெய்
செய்முறை:
முதலில் ஒரு வாணலை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, பிரண்டைத் துண்டுகள், புளி மற்றும் பூண்டை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் கடுகு மற்றும் வெந்தயத்தை வறுத்து பொடித்துக்கொள்ள வேண்டும்.
இதையடுத்து வதக்கி வைத்துள்ள பிரண்டை மற்றும் பூண்டினை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்து அதில் வதக்கிய பிரண்டை மற்றும் மிளகாய் தூள், வறுத்து பொடித்து வைத்துள்ள கடுகு, வெந்தயப்பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி பின்னர் ஆற வைத்து பறிமாறலாம். இதனை ஈரமில்லாத பாட்டிலில் எடுத்துக் வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.
English Summary
how to make pirandai thuvaiyal