அபார வெற்றி!!! சாம்பியன்ஸ் டிரோபி 2025 கோப்பையை வென்றது இந்தியா!!! நியூஷீலாந்தை அசால்டாக வீழ்த்தியது.... - Seithipunal
Seithipunal


துபாயில் நடைபெற்று வந்த இந்த இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றது.பேட்டிங்கைத் தேர்வு செய்த நியூஸிலாந்து அணி . அதன்படி, களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு இந்திய பவுலர்கள் தனது முழு முனைப்பையும் பந்து வீச்சில் காட்டினார்கள் . இதனால், அந்த அணியால் ரன்களைக் குவிக்க முடியாமல் திணறியது.

இப்போட்டியில் மிட்செல் 63 ரன்கள், பிரேஸ்வெல் 53 ரன்கள் நாட் அவுட், ரச்சின் ரவீந்திரா 37 ரன்கள், பிலிப்ஸ் 34 ரன்கள் எடுத்து இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 251 ரன்கள் சேர்த்தனர் . மேலும் இந்திய அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதில் தொடர்ந்து, 252 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, கேப்டன் ரோகித் ஷர்மா, கில் ஜோடி சிறப்பாகத் தனது அதிரடி ஆட்டத்தைக் காட்டி வந்தது. இதில் ரோகித் ஷர்மா, சிக்சர்களும், பவுண்டரிகளுமாகப் பறக்க விட்டார்.

இந்திய அணி:

இதனால், 41 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். மேலும் 17 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 100 ரன்கள் குவித்தது.அணியின் ஸ்கோர் 105ஆக இருந்த போது, கில் 31 ரன்னில் சான்ட்னர் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து கவர் திசையில் தூக்கி அடிக்கப்பட்ட பந்தை, பிலிப்ஸ் பாய்ந்து சென்று கேட்ச் பிடித்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்குள், கோலி 1 ரன்னில் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தார். பிரேஸ்வெல் பந்தில் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டானார். இதன் மறுமுனையில் சிறப்பாக ஆடிய கேப்டன் ரோகித் ஷர்மா, 76 ரன்னில் ரச்சின் ரவீந்திரா பந்தில் ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார்.

இதன்முலம் வெறும் 17 ரன்னுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி அதிர்ச்சி கொடுத்துள்ளது.அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் ஜோடி நிதானமாக ஆடி ரன்களைக் குவித்தது. இதனால், இந்திய அணி மெல்ல மெல்ல வெற்றியைப் பிடிக்க நெருங்கியது. இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 48 ரன்னில் அவுட்டானார். இதைத் தொடர்ந்து, அக்சர் படேலும் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், வெற்றியை நோக்கி இந்திய அணி மெல்ல மெல்ல முன்னேறியது.இறுதியில் கே.எல். ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில், ஒரு ஓவர் மீதம் இருந்த நிலையில் வெற்றிப் பெற்றது. கே.எல். ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்திருந்தார்.இதன்மூலம், 3வது முறையாக இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது. இந்த இறுதி போட்டி ,ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி அண்மையில் டி20 உலகக்கோப்பையை வென்றது போல தற்போது, சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றுள்ளது.

இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதில் சிறப்பம்சமாக, கோப்பையை இந்திய அணி கையில் வாங்கும்போது அரங்கமே ரசிகர்களின் கரகோஷத்தால் அதிர்ந்து போனது. இது குறித்து ரசிகர்கள் பலர் தங்களது எக்ஸ் பக்கத்தில் விமர்சனங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றார்கள் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A huge victory India won the Champions Trophy 2025 defeated New Zealand


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->