குட் பேட் அக்லி படத்தில் பர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும்?
good bad ugly movie first single update
பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஜி.வி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்தப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.
கடந்த 28-ம் தேதி 'குட் பேட் அக்லி' படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் இதுவரை வெளியான தமிழ் படங்களின் டீசரில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கடந்த டீசர் என்ற சாதனையை 'குட் பேட் அக்லி' படம் படைத்துள்ளது. அதாவது 35 மில்லியன் பார்வைகளை இந்த டீசர் கடந்துள்ளது.
இந்தப் படம் உலகளவில் 2000 திரைகள் வரை திரையிடப்படலாம் என்றத் தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தனது பட வேலைகளை முடித்து கார் ரேஸிங்கில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் "படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில். சுட சுட ரெடி பண்ணியிருக்கோம்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
good bad ugly movie first single update