கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்கள் ஓடாது - தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த வாட்டாள் நாகராஜ்!
Vatal Nagaraj Tamil Cinema Karntaka TN Govt
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்காவிட்டால், கர்நாடக மாநிலத்தில் தமிழ் திரைப்படங்களை வெளியிட அனுமதிக்க முடியாது என, கர்நாடக சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பகுதியில், வாட்டாள் நாகராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வாட்டாள் நாகராஜ் தெரிவித்தாவது, "மேகதாது அணைக்கட்ட தமிழக அரசு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், ஒரு மாதத்திற்குள் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். இல்லையெனில், முதலாவது நடவடிக்கையாக கர்நாடக மாநிலத்தில் தமிழ் திரைப்படங்களை ஒளிபரப்ப அனுமதிக்க மாட்டோம்" என்றார்.
மேலும், "தமிழக அரசு காவிரி நீரை கடலில் கலக்க அனுமதிக்கிறது. அதை தடுக்கவே மேகதாது அணை கட்ட முயற்சி செய்கிறோம்" என்று வாட்டாள் நாகராஜ் விளக்கினார்.
தொடர்ந்து பேசிய நாகராஜ், "மும்மொழிக் கொள்கையை எதிர்க்க தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் உருவாக்கிய 'கூட்டு நடவடிக்கைக் குழு'க்குப் பயங்கர எதிர்ப்பு தெரிவிக்கிறோம். தொகுதி மறுசீரமைப்பில் கர்நாடக மாநிலத்தின் தொகுதி எண்ணிக்கையை குறைத்தால், அதற்கு எதிராக மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க போராட தயார்" என தெரிவித்தார்.
English Summary
Vatal Nagaraj Tamil Cinema Karntaka TN Govt