இந்தியர்களே உஷார்: 66% இந்தியர்களுக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பு இருக்காம்! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் உலகின் பல பகுதிகளிலும் இதய நோயின் அபாயம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவைச் சார்ந்தவர்களில் 66% பேருக்கு இதய நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்திருக்கிறது.

அந்த ஆராய்ச்சியின் படி இந்தியர்களுக்கு இயற்கையிலேயே ரத்தத்தின் காம்பவுண்ட் அளவு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கிறது இதனால் ரத்தத்தில் ஹோமோசைஸ்டீன் அளவு அதிகரிக்கும்.

ஹோமோசைஸ்டீன் என்பது மெத்தியோனைன் மற்றும் சிஸ்டைனின்  ஆகியவற்றின் வளர்ச்சிதை மாற்றத்தால் இடைநிலையில் உள்ள ஒரு அமினோ அமிலம். இது நம் இதயத்தின்  தமனிகளில் படிந்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்தக் கூடியது.

இவை உயர்ப்புறத உணவுகள் சிவப்பு இறைச்சி வகைகள் மற்றும் பால் ஆகியவற்றில் அதிகமாக உள்ளது. ஒரு மனிதனுக்கு 5 முதல் 15 மைக்ரோமோல்ஸ் ஹோமோசியஸ்டைன் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை 50 ஐ தொட்டால் அது நம் இதயத்தின் ஆர்டரி  லைனிங்கை பாதிக்கலாம். இதன் காரணமாக மாரடைப்பு போன்ற இதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indians are 66 percent more likely to develop heart disease


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->