ரூ.30 ஆயிரம் லஞ்சம்; போலீஸ் எஸ்.ஐ-யை கைது செய்த, மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்..!
Madurai Anti Corruption Department police arrested a police SI who took a bribe of Rs 30 thousands
புகாரின் மீது நடவடிக்கை எடுக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரி ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் புதூர் ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் சண்முகநாதன். ஹச்.எம்.எஸ்., காலனியை சேர்ந்த கவிதா குற்ற வழக்கில் நடவடிக்கை எடுக்கும்படி சண்முகநாதன் இடம் கூறியுள்ளார்.

ஆனால், ஜெயந்திபுரம் பகுதியில் கவிதா வசித்தபோது, முன்விரோதம் காரணமாக தாக்குதலுக்கு ஆளாகப் பட்டுள்ளார். இது தொடர்பாக நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில்,இருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மற்ற இருவரை கைது செய்வதற்கு ரூ.1 லட்சம் சண்முகநாதன் லஞ்சம் கேட்டுள்ளார். இதற்கு கவிதா தயக்கம் தெரிவித்ததால் ரூ. 70,000 தருமாறு சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு லஞ்சம் கொடுக்க விரும்பாத கவிதா லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின்படி, சண்முகநாதனிடம் ரூ. 30,000 லஞ்சம் கொடுக்க கவிதா முன் வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, புதூர் பஸ் நிலையம் அருகே, சண்முகநாதனுக்கு கவிதா ரூ. 30,000 லஞ்சமாக கொடுத்துள்ளார். இந்த பணத்தை சண்முகநாதன் பைக் பெட்ரோல் டேங்கில் உள்ள கவரில், வைத்து கொண்டிருக்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கையும், களவுமாக சிக்கியுள்ளார்.
இதையடுத்து, அவரை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்யசீலன் தலைமையிலான போலீசார், கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
Madurai Anti Corruption Department police arrested a police SI who took a bribe of Rs 30 thousands