மூன்றாவது கட்டமாக 08 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுத்துள்ளது; இதற்கு இணையாக 2000 பாலஸ்தீனர்களை விடுவிக்க ஒப்புதல்..! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்க்கு இடையிலான போரில் 120-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அத்துடன், ஹமாஸ் அமைப்பினர் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதற்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியது. சுமார் 45 நாட்கள் கழித்து இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளமையை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினர் சுமார் 150 பிணைக்கைதிகளை விடுவித்தனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் பலர் விடுவிக்கப்பட்டனர்.

https://x.com/IDF/status/1884913502831198208

அதன்பின் ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. குறித்த போர் ஒரு வருடத்திற்கு நடைபெற்று வந்தது

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தராக செயல்பட்டு, இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் 6 வாரம் போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் என்று, காசா போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

https://x.com/IDF/status/1884979604508549493

அத்துடன் ஹமாஸ்- இஸ்ரேல் இடையே பிணைக்கைதிகள் மற்றும் பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்ய செய்யவும் ஒப்பந்தம் ஏற்பட்டது.அதன் அடிப்படையில் ஹமாஸ் அமைப்பினர் முதற்கட்டமாக 03 பேரையும், 02-வது கட்டமாக 04 பேரையும் விடுதலை செய்தனர்.

இந்த நிலையில் இன்று 03-வது கட்டமாக பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டவர்களில் 08 பேரை ஹமாஸ் விடுவித்துள்ளது. இதில் 20 வயது ஆகம் பெர்கர் என்றபெண் ராணுவ வீரர் ஆவார். இவரை இன்று முன்னதாகவே விடுவித்தது.

அதன்பின் அர்பெல் யெஹூத் (29), 80 வயது முதியவர் மற்றும் தாய்லாந்தை சேர்ந்த ஐந்து பேர் என மொத்தம் 08 பேரை விடுவித்தது.

இவர்களில் அர்பெல் யெஹூத் முகமூடி அணிந்த ஹமாஸ் அமைப்பினர் ஏராளமானோருக்கு நடுவே அழைத்து வந்தனர். இதனால் குழப்பம் நீடித்தது. இதனால், பிணைக்கைதிகள் பாதுகாப்பாக விடுவிக்கப்படுவதை மத்தியஸ்தர்கள் உறுதி செய்ய வேண்டும் என நேதன்யாகு தெரிவித்திருந்தார்.

https://x.com/IDF/status/1884967404624613789

அத்துடன், கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாய்லாந்தை சேர்ந்த 23 பேர் உள்பட 100-க்கும் அதிகமான பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். தாய்லாந்தை சேர்ந்த இன்னும் 03 பேர் பிணைக்கைதிகளில் இருவர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இன்னிலையில், போர் நிறுத்தத்தின் முதற்கட்டத்தில் 33 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவு செய்துள்ளது. அதற்கு இணையாக சுமார் 2000 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hamas releases 8 more hostages in the third phase


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->