ஆளும் கட்சியை விமர்சித்தால்தான் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும்..விஜய் குறித்து சொல்கிறார் பார்த்திபன்! - Seithipunal
Seithipunal


ஆளுங்கட்சியை விமர்சனம் செய்ததால்தான் அடுத்த இடத்துக்கு வரமுடியும் என்றும் எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் அதைத்தான் செய்தார்கள் என்றும் அதைவிடுத்து பாராட்டிக்கொண்டு இருந்தால் தலைவராக வரமுடியாது எனநடிகர் பார்த்திபன் கூறியுள்ளார். 


புதுச்சேரிக்கு நேற்று வருகைதந்த சினிமா நடிகரும், டைரக்டருமான பார்த்திபன், புதுச்சேரி மாநில பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரான லட்சுமிநாராயணனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருவரும் சுமார் 15 நிமிடம் தனியாக பேசினார்கள்.

அதன்பின் செய்தியர்களுக்கு பேட்டியளித்த நடிகர் பார்த்திபன் கூறியதாவது:-புதிதாக அரசியலுக்கு வருபவர்களை ஊக்குவிக்கவேண்டும்  என்றும் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதில் தப்பு கிடையாது என கூறினார் . மேலும் தொடர்ந்து பேசிய பார்த்திபன், விஜய் அவரது வேகத்தில் செல்லட்டும் என்றும்  அரசியலில் பெரிய இடத்துக்கு செல்ல தடை இல்லாமல் இருக்காது என்றும்  ஆட்சியை பிடிப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம். அதனால் தடைகளை தாண்டி செல்வதுதான் உண்மையான தலைவருக்கு அழகு. ஆளுங்கட்சியை விமர்சனம் செய்ததால்தான் அடுத்த இடத்துக்கு வரமுடியும் என்று  கூறினார் . 

மேலும் எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் அதைத்தான் செய்தார்கள் என கூறிய பார்த்திபன்  அதைவிடுத்து பாராட்டிக்கொண்டு இருந்தால் தலைவராக வரமுடியாது என்றும்  இதனால் நான் விஜய்க்கு ஆதரவாக செல்கிறேன் என்று அர்த்தமல்ல என்றும்  பெரியார் என்பது நமது பாரம்பரியத்தில் சமூகத்தில் நீக்க முடியாத விஷயம். அதில் எதிர் கருத்து சொல்வதற்கு பின்னால் வேறு ஏதாவது அரசியல் இருக்கலாம். அது நமக்கு தெரியவில்லை என பார்த்திபன் . இவ்வாறு அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

You can only go to the next level by criticising the ruling party. Parthiban talks about Vijay


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->