காலையில் இந்த உணவை எடுத்து கொள்வதால் உடல் எடை குறைந்து, சருமம் பொலிவுறும்.!
oats for weightloss
காலை உணவு ஒரு நபருக்கு மிக முக்கியமானது. ஆரோக்கியமாக காலை உணவு எடுத்துக் கொண்டால் அன்றைய நாள் முழுவதும் நாம் எனர்ஜியுடன் இருக்க முடியும். உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் காலை உணவு கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடல் எடையை குறைக்க சிலர் காலை உணவை எடுத்துக் கொள்ளாமல் இருப்பார்கள். ஆனால், இதனால் பலன் கிடைக்காது. மாறாக உடல் எடை தான் அதிகரிக்கும். ஓட்சை காலையில் எடுத்துக் கொள்வது மிக அற்புதமான பலன் கொடுக்கும். இதில் அதிகப்படியான தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து, விட்டமின்கள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.
இது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் காலையில் ஓட்ஸ் எடுத்துக் கொள்வது அன்றைய நாளை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது உடல் எடையை குறைக்க உதவும்.
இதை தினமும் சாப்பிட்டு வந்தால் சீராக உடல் எடை பராமரிக்கப்படும். காலை உணவாக ஓட்ஸ் எடுத்துக் கொள்வதால் செரிமானம் அதிகரிக்கும். பசியை தடுத்து பல நோய்கள் வருவதை தடுக்கக்கூடும்.
தினமும் ஓட்ஸ் சாப்பிட்டு வருவது சரும பொலிவுக்கு உதவும். இதில் இருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நமது சருமத்தை மினுமினுப்புடன் வைத்திருக்க உதவும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புத்துணர்ச்சியுடன் சருமத்தை வைத்திருக்கும்.