இரட்டை இலை சின்னம் முடக்கமா? ஓபிஎஸ் கையில் சாவி! தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!
ADMK iradai elai simple case election commission EPS OPS Chennai High court
இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது நான்கு வாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் ஒதுக்ககூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கை கடந்தமுறை விசாரணை வந்தபோது, கடந்த பிப்ரவரி மாதம் அளித்த மனு மீது தேர்தல் ஆணையம் தற்போதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், இன்னும் ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் நான்கு வாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வத்தின் கருத்துக்களை கேட்ட பிறகு தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
English Summary
ADMK iradai elai simple case election commission EPS OPS Chennai High court