நான் இந்தி கற்றுக் கொள்வதால் என்ன தவறு - நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பொங்கிய நிர்மலா சீதாராமன்.! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி வருகின்றன. இருப்பினும் நாடாளுமன்ற அலுவல்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மக்களவையில் வங்கிகள் திருத்த சட்ட மசோதா தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியில் பதில் அளித்தார். அப்போது, இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர், நிர்மலா சீதாராமன் பேசிய இந்தி தவறாக உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளிக்க நிர்மலா சீதாராமன் எழுந்தபோது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததனால் அவையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், "இந்தி திணிப்பை எதிர்க்கட்சிகள் எதிர்க்கிறார்கள்.. நல்லது.. யாரும் எதையும் திணிக்க முடியாது. உயர் கல்வியை கூட பிராந்திய மொழிகளில் படிக்க வேண்டும் என்று கூறிய முதல் பிரதமர் மோடிதான்.

மருத்துவ கல்வியை கூட தமிழில் படிக்கும் வாய்ப்புள்ளது. சிறிய விவாதத்திற்காக வாதம் செய்யாதீர்கள். தமிழகத்தில் வாழ்ந்த அனுபவத்தை வைத்து நான் பேசுகிறேன். இந்தி வட இந்திய மொழி.. எனக்கு இந்தி தெரியாமல் இல்லை, ஆனால் தமிழ்நாட்டில் இந்தி படிக்க விடாமல் செய்ததற்கு தி.மு.க.வினர் மீதுதான் புகார் கூற வேண்டும்.

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இந்தி கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா? என்று கேலிக்கு உள்ளாக்கினார்கள். அரசியல் ஆதரவு காரணமாக அவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள். தமிழ்நாடு இந்தியாவின் இன்னொரு அங்கம் கிடையாதா? நான் இந்தி கற்றுக் கொள்வதால் என்ன தவறு உள்ளது. அவர்கள் வந்தேறி என்ற வார்த்தையை பயன்படுத்தினர்" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union minister nirmala seetharaman speech about hindhi language


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->