சோகத்தில் திரையுலகம் - பிரபல சின்னத்திரை நடிகர் காலமானார்.!
serial actor nethran passed away
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் பல ஆண்டுகளாக நடித்து வந்தவர் நடிகர் நேத்ரன். மருதாணி சீரியல் மூலம் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கிய இவர், சூப்பர் குடும்பம், முள்ளும் மலரும், வள்ளி, சதிலீலாவதி, உறவுகள் சங்கமம், பாவம் கணேசன் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் நேத்ரனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் இருப்பது உறுதியாகியுள்ளது. அதற்காக அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், நடிகர் நேத்ரன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது மறைவு சின்னத்திரை ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நடிகர் நேத்ரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏறக்குறைய 25 வருடங்கள் சின்னத்திரையில், பிரபல நடிகராக வலம் வந்தவர் நேத்ரன் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
serial actor nethran passed away