இவர்களெல்லாம் பூண்டு சாப்பிடக் கூடாது.? ஏன் தெரியுமா.?
Some peoples don't ate garlic
நாள்தோறும் சமையலறையில் பயன்படுத்தப்படும் பூண்டு அதிக மருத்துவ குணம் கொண்டது. அந்த வகையில் பூண்டு சாப்பிடுவதால் வாயு மற்றும் செரிமான கோளாறுகளை குணப்படுத்தும். அதன் காரணமாகவே அனைத்து உணவுகளிலும் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.
அதேசமயம் பூண்டை சிலர் உணவில் சேர்த்துக் கொண்டு சாப்பிடுவதால் அவர்களுக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில் யாரெல்லாம் பூண்டு சாப்பிடக் கூடாது என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் கார உணவுகள் மற்றும் பூண்டு சேர்த்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
பூண்டு சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வெகுவாக குறையும் அதன் காரணமாக நீரழிவு நோயாளிகள் பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பூண்டில் உள்ள சல்பர் காரணமாக அதிகமாக சாப்பிடும் போது வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதேபோல் பச்சையாக பூண்டைசாப்பிடுவதால் சிலருக்கு தலைவலியும் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் பூண்டில் உள்ள அலிசின் கல்லீரல் நச்சை அதிகரிக்கும். அதன் காரணமாக கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக தோல் வியாதி உள்ளிட்ட அலர்ஜி உள்ளவர்கள் பூண்டு சாப்பிடுவதால் தோல் அரிப்பு மற்றும் தடிப்பு உண்டாக வாய்ப்புள்ளது.
மேலும் அதிக அளவில் பூண்டு சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் மற்றும் செரிமானக்கோளாறை ஏற்படுத்தும்.
English Summary
Some peoples don't ate garlic