அன்றாடம் 4 பல் பூண்டை உணவில் சேர்ப்பதால் இப்படியெல்லாம் அதிசயம் நடக்குமா.?!  - Seithipunal
Seithipunal


நம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு வெங்காய இனத்தை சார்ந்தது. சுமேரியர்களால் 5000 வருடங்களுக்கு முன்பு விளைவிக்கப்பட்டு, அதனின்  நறுமணச் சுவை, மருத்துவக்குணங்களுக்காக எகிப்தியர்கள், கிரேக்கர்கள்,ரோமானியர்கள் சீனர்கள் என்று உலகம் முழுவதும் உபயோகிக்கிறார்கள்.

பூண்டை அரிந்தும்,இடித்தும் அரைத்தும் சமையலில் சேர்ப்பதால் உணவுக்கு ஒரு நல்ல நறுமணத்தை தருகிறது.

அதைப்போல் பூண்டை நசுக்கும்போது அல்லது பற்களை வைத்து கடிக்கும் போது பூண்டிலிருந்து வெளிப்படும்  33 வகையான கந்தகச் சேர்மங்கள் நம் ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை  குறைத்து  நல்ல கொழுப்புகள் அதிகமாக சுரக்க காரணமாக இருக்கின்றன. 

அதே சமயம் இருதயக்குழாயில் சேர்ந்திருக்கும் கொழுப்பை கரைக்க உதவுகிறது. இதனால்  இதய நோய் பாதிப்பில் இருந்து  நம்மை காத்துக் கொள்ளலாம்.

வாயுத் தொல்லைக்கு பூண்டு அன்றாடம் உட்கொண்டு வந்தால் 'வாயுத்தொல்லை' குறையும்.
தாய்மார்களுக்கு 'தாய்ப்பால் சுரப்பை' அதிகரிக்கிறது.

ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதில் பூண்டு முக்கிய பங்கு வைக்கிறது  600 முதல் 1500 மில்லி கிராம் வரை  பதப்படுத்தப்பட்ட பூண்டு சாரானது  'அட்டெனோலோல்' மாத்திரையை போலவே  ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வைக்கிறது.

பூண்டில் இருக்கும் ஆக்சிஜனேற்றம் மூலக்கூறுகள்  'அல்சைமர்' மற்றும் 'டிமென்ஸியா'  என்னும் மனச்சிதைவு  நோயை கட்டுப்படுத்துகின்றன

பூண்டானது  பாரம்பரியமாக  சோர்வை குறைக்கவும்  தொழிலாளர்களின்  வேலை திறனை மேம்படுத்த  ஊக்க மருந்தாகவும், ஆண்களுக்கான 'ஆண்மை குறைவு'ப் போன்ற பிரச்சைனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

ஆதலால் பூண்டை அன்றாடம் நமது உணவில் சேர்த்து கொள்வதால் அளப்பரிய நன்மைகள் கிடைக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Special Benifets Of garlics


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->