பாத வெடிப்பால் அவதிப்படுகிறீர்களா? - இதோ உங்களுக்குத்தான்.! - Seithipunal
Seithipunal


பாத வெடிப்பால் பெரும்பாலானோர் அவதிப்படுகின்றனர். இதற்கு காரணம், உடலில் நீர்ச்சத்து குறைப்பாடு மற்றும் உடல் எடை அதிகரிப்பது தான். அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண்கள் தான் பாத வெடிப்பு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

ஆரம்பத்தில் இதை கவனிக்காமல் விட்டால், பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு பெரியளவில் தொந்தரவுகளை கொடுக்கும். அதனால், இந்தப் பாத வெடிப்புகளை இயற்கை முறையில் சரிசெய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.

* குளிர்ச்சி தன்மை உடைய மருதாணி இலைகளை அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தடவி, உலர்ந்த பிறகு கழுவினால் வெடிப்புகள் மறையும்.

* வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து, வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் குணமாகும்.

* தினமும் இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்பு கால்களை நன்றாக கழுவி, துடைத்துவிட்டு தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் பாத வெடிப்பு வராது.

* ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீரை எடுத்துக் கொண்டு அதில், எலுமிச்சை சாறு கலந்து கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்து நன்றாக தேய்த்து சுத்தம் செய்தால் வெடிப்புகள் மறைந்து பாதம், பளபளப்பாக மாறும்.

* பாதங்களை பாதாம் ஆயில், ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் வெடிப்புகள் மிருதுவாகி விரைவில் மறையும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tips of remove feet cracked


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->