உங்கள் எடையை குறைத்து, ஆரோக்கியத்தையும், அழகையும் தரும் இந்த ஜூஸ்.! - Seithipunal
Seithipunal


உடல் எடை இருப்பவர்கள் மிகவும் சோர்ந்து கவலையோடு இருப்பார்கள். அவர்கள் எவ்வளவுதான் உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டாலும் உடல் எடையை குறைக்க முடிவதில்லை. ஒரு சிலருக்கு உணவு கட்டுப்பாடும் கடைபிடிப்பதில்லை. அவர்களால் சாப்பிடாமல் இருக்க முடியாது. 

அவர்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு உணவை பார்த்தாலே பசியை தூண்டி சாப்பிடும் ஆர்வத்தை உண்டாக்கும். ஒரு சிலர் அதிகம் சாப்பிடாமலே இருப்பர். ஆனாலும் அவர்களுக்கு உடல் எடையானது குறைவே குறையாது. இவ்வாறு இருப்பவர்கள் முடிந்த அளவு ஃபாஸ்ட் ஃபுட் துரித உணவு முறைகளை தவிர்ப்பது நல்லது. 

மேலும் ஸ்னாக்ஸ், சிப்ஸ், எண்ணெயில் பொறித்த உணவுகள் இதையெல்லாம் தவிர்ப்பது நல்லது. மேலும் அதிக நேரம் தூங்குவதாலும் உடல் எடை கூடும்  ஒரே இடத்தில் இருப்பது, கை கால்களுக்கு வேலை கொடுக்காமல் ஓய்வாக இருப்பது, இது போன்ற வற்றாலும் உடல் எடை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:

தேன் ரெண்டு ஸ்பூன், 
எலுமிச்சை தோல் இரண்டு,
வெந்நீர் ஒரு கிளாஸ்.

ஒரு கிளாஸில் வெதுவெதுப்பான வெந்நீர் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு தோலை எடுத்துக் கொள்ளவும். அந்தத் தோலை மூன்று மணி நேரம் ஊறவைத்து, அந்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலை சாப்பிடும் முன் ஒரு கிளாஸ் அருந்தி வந்தால் சிறிது நாட்களிலேயே உங்களது எடை குறையும். 

மேலும் தேவையற்ற சதை ஏற்படுவதையும் தடுக்கலாம். இதன் மூலம், உங்களது அழகும் கூடும். மேலும் இவர்கள் தினமும் காலை ஒரு பத்து நிமிடமாவது உடற்பயிற்சி அல்லது வாக்கிங் மேற்கொள்வது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Weight loss Using These Juice In Tamil


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->