கர்நாடக மாநிலம் உத்தரகன்னடாவில் நிலச்சரிவு - தமிழக லாரி டிரைவர்கள் 3 பேர் உட்பட மொத்தம் 12 பேர் பலி..!! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக உத்தரகன்னடாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த லாரி டிரைவர்கள் 3 பேர் உட்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு மாநிலம் முழுவதும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதையடுத்து உத்தரகன்னடா மாவட்டத்தில் உள்ள அங்கோலா தாலுகாவைச் சேர்ந்த சிரூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. 

இந்த நிலச்சரிவில் அங்கிருந்த 2 வீடுகளும், ஒரு ஓட்டலும் மண்ணுக்கு அடியில் சிக்கின. அந்த சமயத்தில் ஓட்டலுக்கு வந்திருந்த சில லாரி டிரைவர்களும் இந்த நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர். இதில் கிருஷ்ணகிரி மாவட்டதைச் சேர்ந்த முருகன், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னண்ணன் மற்றும் சரவணன் ஆகிய 3 லாரி டிரைவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 

இதுவரை இந்த நிலச்சரிவில் 12 பேர் சிக்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கி ஒரு டேங்கர் லாரியும், மரக்கட்டைகள் ஏற்றி வந்த ஒரு லோடு லாரியும் நெடுஞ்சாலைக்கு அருகில் ஓடும் கங்காவளி ஆற்றில் அடித்துச் செல்லப் பட்டன. இந்நிலையில் தற்போது டேங்கர் லாரி மீட்கப் பட்டுள்ள நிலையில், மற்றொரு லோடு லாரியைத் தேடும் பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளன. கடந்த ஜூலை 16ம் தேதி உத்தர்கன்னடாவில் நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 Died in Karnataka Uttrakannada In Landslide including 3 Tamil Lorry Drivers


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->